×

போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு போட்ட விஐபி, அமைச்சர் அதிமுக பிரமுகரிடம் விஐபிக்களின் ஆபாச வீடியோக்கள்?: பரபரப்பு தகவல்கள்

சென்னை: அதிமுக பிரமுகரிடம் விஐபிக்களின் ஆபாச வீடியோ இருப்பதால்தான், போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விடுவிக்கச் சொல்லி ஒரு விஐபியும், அமைச்சர் ஒருவரும் போன் செய்து உத்தரவிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. பொள்ளாச்சியைச் சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவிகளுக்கு காதல் வலை வீசி, அவர்களை ஏமாற்றி பாலியல் தொந்தரவுகளை திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் செய்து வந்துள்ளனர். பின்னர் அவர்களை வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டியும் வந்துள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாக இந்த கொடூரங்களை அவர்கள் அரங்கேற்றி வந்துள்ளனர். இது குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் புகார் செய்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில், பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு மாணவியை சபரிராஜன், காதல் வலை வீசி, திருநாவுக்கரசுவின் பங்களாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த பங்களாவில், மாணவியிடம் நெருங்கி பழகிய சபரிராஜன், ஒரு கட்டத்தில் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போதுதான் வீட்டில் சிலர் தன்னை வீடியோ எடுக்க முயற்சிப்பதை பார்த்து விட்டார். இதனால் இந்த கொடூர கும்பலிடம் இருந்து தப்பிய மாணவி, நேராக தனது சகோதரரிடம் கூறியுள்ளார்.

மாணவியின் சகோதரரும், திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனின் நெருங்கிய நண்பர்கள். நண்பனின் தங்கையிடமே இப்படிப்பட்ட வக்கிர புத்தியை இவர்கள் காட்டியது, மற்ற நண்பர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால்தான், சபரிராஜன் மற்றும், திருநாவுக்கரசு ஆகிய 2 பேரை மட்டும் தனியாக தூக்கிச் சென்று, மாணவியின் சகோதரர் மற்றும் நண்பர்கள் அடித்து, உதைத்துள்ளனர். அவர்களிடம் இருந்த வீடியோக்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் வைத்திருந்த செல்போனில் ஏராளமான படங்களும் இருந்துள்ளன. அவர்களிடம் விசாரித்தபோது, ஏராளமான பெண்களுடன் சபரிராஜன் பழகியதும், இதை தெரிந்து கொண்ட நாகராஜை, திருநாவுக்கரசு ஆகியோர் வீடியோக்களை பிடுங்கி, அதை வைத்து மிரட்டி பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதைக் கேட்டதும், அதிர்ச்சி அடைந்த, உறவினர்கள் அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர். போலீசுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் பொள்ளாச்சியில் உள்ள ஒரு இன்ஸ்பெக்டர், குற்றவாளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு விடுவித்து விட்டார். ஏனெனில் இந்த கும்பலுக்கு ஆதரவாக அதிமுக பிரமுகர் பார் நாகராஜூம் களத்தில் குதித்து, இன்ஸ்பெக்டரிடம் பேசியுள்ளார். இதனால் அவர் பணம் வாங்கிக் கொண்டு விடுவித்து விட்டார். இதற்கிடையில், பார் நாகராஜ், தனது ஆட்களுடன் சேர்ந்து, மாணவியின் சகோதரை தாக்கியுள்ளனர்.

இதனால் மாணவியின் சகோதரர் மற்றும் நண்பர்கள் சேர்ந்து ஆபாச வீடியோக்கள் குறித்தும், இந்த கும்பல் குறித்தும் போலீசில் புகார் செய்தனர். ஆனால் இதில் போலீஸ் அதிகாரிகள் பணம் வாங்கிக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போதுதான், பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு விஐபியும், மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சரும் பொள்ளாச்சி இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து, ஆபாச வழக்குகளை கண்டு கொள்ள வேண்டாம். சகோதரரை தாக்கிய வழக்கில் பார் நாகராைஜ ஸ்டேஷனிலேயே ஜாமீனில் விடுவித்ததுபோல கணக்கு காட்டுங்கள் என்று கூறி விட்டனர். இதனால் இன்ஸ்பெக்டர் ஒருவர் நாகராைஜ  விடுவித்து விட்டார். கோவையில் இருந்து ஒரு போலீஸ் உயர் அதிகாரியும், நாகராஜூக்காக பேசியுள்ளார். இந்த நிலையில் வழக்கு தீவிரமான நிலையில் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் பல நாட்களுக்குப் பிறகு தற்போது திருநாவுக்கரசை கைது செய்துள்ளனர். நாகராஜை விடுவித்து விட்டதால், பல ஆதாரங்கள் இருந்தும் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பல வீடியோக்கள் தற்போது அழிக்கப்பட்டு விட்டதாகவும், நாகராஜிடம் விஐபிக்களின் வீடியோக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிபிஐ விசாரணையில் இந்த உண்மைகள் எல்லாம் வெளியாகும் என்றும் அப்போது மேலும் பல விஐபிக்கள் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

நாகராஜின் பாலியல் தொடர்பு.... புது வீடியோ ஆதாரம் வெளியீடு
பார் நாகராஜ் எந்த தவறும் செய்யாதவர் என்று மாவட்ட எஸ்.பி.பாண்டியராஜன் நற்சான்றிதழ் கொடுத்தார். ஆனால், செக்ஸ் விவகாரத்தில் சிக்கிய திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை பொதுமக்கள் பிடித்து உதைத்து விசாரணை நடத்தும்போது   அதை வீடியோவில் பதிவு செய்துள்ளனர். அப்போது திருநாவுக்கரசு வாக்குமூலம் அளிக்கையில், ‘சபரி மாணவிகளோடு இருக்கும் பாலியல் வீடியோக்களை   நானும் (திருநாவுக்கரசு), சதீஸ், நாகராஜ் அண்ணனும் சேர்ந்து   வாங்கிக்கொண்டோம்’ என்று கூறியிருக்கிறார். இந்த வாக்குமூலம் அடிப்படையில்   பார் நாகராஜ் இவ்விவகாரத்தில் நேரடியாக தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : VIPs , VIP, inspector, police, porn videos, AIADMK,
× RELATED அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்:...