×

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்கு பொறுப்பேற்று எடப்பாடி முதல்வர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி வீடு முற்றுகை

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்கு முழு பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து விலக கோரி எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட முயன்ற மாணவர்  அமைப்பை சேர்ந்த நூற்றுக்கும்  மேற்பட்ேடாரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். பொள்ளாச்சி பாலியல் குற்றங்களில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றங்களின் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் பலர் உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், குற்றவாளிகளை காப்பற்றும் நோக்கில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ேகாரி மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 3வது நாளாக, மாநிலம் முழுவதும் நேற்றும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்லூரி முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மாணவர்களின் தொடர் போராட்டத்தால் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்ட இளம்பெண்களுக்கு ஆதரவாக அவர்களின் கல்லூரி முன்பு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னையில், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்திற்கு முழு பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக கோரி அவரது வீட்டை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மாநில தலைவர் வெங்கடேஷ் தலைமையில், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் அறிவித்தபடி மாணவர் அமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் முன்பு ஒன்று கூடினர். பின்னர் அனைவரும் முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி பதாகைகளுடன் பேரணியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டை நோக்கி புறப்பட்டனர். அப்போது போலீசார் சாலையின் இடையே இரும்பு தடுப்புகள் அமைத்து பேரணியாக சென்ற மாணவர்கள் அமைப்பினரை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் மாணவர் அமைப்புகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீசார் பேரணியாக சென்ற அனைவரையும் குண்டுக் கட்டாக கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,house , Pollachi sexual affair, Chief Minister,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!