×

ஊழல் பிடியில் அதிமுக சிக்கியதால் பாஜகவுக்கு 20 தொகுதி கிடைத்தது : மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி

* அதிமுக-பாஜ கூட்டணியை அகற்றுவோம் என்ற ஒரு முழக்கத்ைத முன்னெடுத்து நடத்த காரணம் என்ன?  இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது கொண்டு வந்த மக்களுக்கு எதிரான பல்வேறு திட்டங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. எனவே அந்த ஆட்சியை நிராகரிக்க வேண்டும் என்பதற்காக, ‘விழட்டும் அதிமுக-பாஜக, வெல்லட்டும் தமிழ்நாடு’ என்ற முழக்கத்தை முன் வைத்துள்ளோம். நீட் தேர்வு என்பது கல்வி உரிமையை பறிக்கும் செயல். இதை விரிவாக்கம் செய்து கொண்டே செல்கிறார்களே தவிர இதுகுறித்த எந்த பாதுகாப்பையும் செய்யவில்லை. அதேபோன்று மாநிலத்தின் உரிமையையும் விட்டு கொடுத்து வருகிறார்கள். பிரதமர் மோடி கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் விவசாயத்தையும், ரேசன் கடைகளையும் பாதிக்கிறது. இதனால் ரேசன் கடைகளே இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மீன்வள மசோதா கொண்டு வந்திருக்கிறார்கள். அதுவும் மீனவர்களுக்கு எதிராக இருக்கிறது. அதையும் அதிமுக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. சிஏஏ போன்ற சட்டங்கள் அனைத்து தரப்பினருக்கும் எதிராக உள்ளது. எனவே இவர்களை எதிர்க்க வேண்டியுள்ளது. * ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை கூறியிருக்கிறீர்களே?  தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேர்தலில் பங்கெடுக்காதவர்களும் பேச உரிமை உள்ளது. தேர்தல் விழிப்புணர்வு சம்பந்தமாகவும், கருத்துகள் சொல்லவும் உரிமை உள்ளது. அதை கூட தேர்தல் ஆணையம் எங்களுக்கு மறுக்கிறது. முழுக்க முழுக்க ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. * இந்த தேர்தலில் உங்கள் பிரச்சார பயணம் யாருக்கு ஆதரவாக உள்ளது? பாஜ அரசு கொண்டு வந்த மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த காலங்களில் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அப்போது எங்களோடு அந்த போராட்ட களத்தில் பங்கெடுத்த கட்சிகள், அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து அவர்கள் நிறுத்தியுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறேன். குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆதி தமிழர் பேரவை இவர்கள் நிறுத்தியுள்ள வேட்பாளர்களை ஆதரித்து எனது பிரச்சாரம் சென்று கொண்டிருக்கிறது.*  அதிமுக ஆட்சி, ஊழல் நிறைந்த ஆட்சியாக இருந்தது என்ற குற்றச்சாட்டு அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விவாத பொருளாக உள்ளதே?  பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கான அடிப்படை காரணமே இவர்கள் ஊழல் செய்தது தான். தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்கு விகிதம் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கு அதிமுக 20 தொகுதிகள் ஒதுக்க வேண்டிய அவசியம் என்ன? கடந்த தேர்தல் சமயங்களில், இந்த அளவுக்கு வாக்கு விகிதம் வைத்திருந்த கட்சிகளுக்கு ஜெயலலிதா  இப்படி எந்த ஒரு கட்சிக்கும் தொகுதிகள் வழங்கியதாக வரலாறு இல்லை. அப்படி இருக்கும் போது இவ்வளவு தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கியது இவர்கள் செய்த ஊழல் காரணமாகத் தான். அதிமுக செய்த இந்த ஊழல் காரணமாக பாஜக நெருக்கடி தரும் என பயந்து 20 தொகுதிகள் தந்துள்ளனர்….

The post ஊழல் பிடியில் அதிமுக சிக்கியதால் பாஜகவுக்கு 20 தொகுதி கிடைத்தது : மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி appeared first on Dinakaran.

Tags : Bhajagu ,Operations Coordinator ,Thirumurugan Gandhi ,Akhimukha-Baja ,Bajhaku ,
× RELATED பிரபாகரன் எனக்கு பயிற்சி கொடுத்தார்...