குளச்சல் : குமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் மாசிக்கொடை விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12ம் தேதி நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோயிலில 16 உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தது. மாசிக்கொடைக்காக தற்காலிகமாக 6 உண்டியல்களும், ஒரு திறந்த வார்ப்பும் வைக்கப்பட்டிருந்தது.
இந்த உண்டியல்கள் அனைத்தும் நேற்று கோயில் இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. முதுநிலை கணக்கர் இங்கர்சால், காண்காணிப்பாளர் ஜீவானந்தம், ஆய்வாளர் கோபாலன்,காரியம் ஆறுமுகதரன், மராமத்து பொறியாளர் ஐயப்பன், குழித்துறை தேவிகுமாரி மகளிர் கல்லூரி மாணவிகள் ஆகியோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், ரொக்கமாக ரூ.36.75 லட்சம், 37.100 கிராம் தங்கம், 715.150 கிராம் வெள்ளி, மலேசிய ரிங்கிட் 100, சவூதி ரியால் 11 ஆகியவை இருந்தது. இது பிப்ரவரி 1ம் தேதி முதல் மார்ச் 12ம் தேதிவரை பக்தர்கள் செலுத்திய காணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி