×

திருத்துறைப்பூண்டியில் வாந்தி, வயிற்றுப்போக்கால் மக்கள் பாதிப்பு : 14 மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் சிகிச்சை

திருத்துறைப்பூண்டி: வாந்தி, வயிற்றுபோக்கு, மயக்க பாதிப்புகள் ஏற்பட்டுள்ள மக்களுக்கு 14 மருத்துவ குழுக்கள்அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர பகுதியிலுள்ள கிராமங்கள், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் பல கிராமங்கள், மன்னார்குடி தாலுகாவில் சில கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுபோக்கு, மயக்கம் ஏற்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இதுவரை சுமார் 1000 பேர் சிசிச்சை பெற்று சென்றுள்ளனர். மேலும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று முன்தினம் கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டு பாதிப்புக்கான காரணம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி பணிகளை முடுக்கி விட்டார்.இதையடுத்து மாவட்ட பூச்சியியல் வல்லுனர் பழனிச்சாமி, கொல்லை நோய் தடுப்பு அலுவலர் டாக்டர் காயத்திரி, வட்டார மருத்துவ அலுவலர் கவுரி தலைமையில் மாவட்டம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர்கள், செவிலியர்கள் கிராமம் கிராமமாக சென்று வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொண்டு வயிற்றுபோக்கு, வாந்தி, மயக்கம் உள்ளவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கி மிகுந்த பாதிப்புக்குள்ளானவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்ல  அறிவுறுத்தினர். இது குறித்து ஆலத்தம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் கவுரி கூறுகையில், வயிற்று போக்கு, வாந்தி, மயக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிசிச்சைஅளிக்க 14 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக சென்று வயிற்று போக்கினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிசிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வயல் வெளிகளில் தண்ணீரில் கிடைக்கும் மீன்களை சாப்பிடகூடாது என்றும், அதிக காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயிலின் காரணமாகவும் பருவநிலை மாற்றத்திலானலும் இந்த வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது.குடிநீர் மாதிரி எடுக்கப்பட்டு சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி தாலுகா முழுவதும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகின்றனர். மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேல் தலைமையில் திருத்துறைப்பூண்டியில் முகாமிட்டு களப்பணி ஆய்வு செய்து உரிய அறிவுரை வழங்கிபணிகளை துரிதப்படுத்தியுள்ளார். திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் ஒன்றியம் முழுவதும் சுகாதார துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.யாருக்கேனும் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டால் கிராமப்புறங்களிலுள்ள போலி டாக்டர்களிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம்.  உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுஉடன் சிகிச்சை எடுத்துக் கொள்ளவேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : diarrhea sufferers ,Thiruthuraipothy ,teams , Tiruthuraipoandi, People, Medical Group
× RELATED ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய...