×

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை சம்பவங்களில் ஈடுபட்ட 6 பேர் கைது

சென்னை: சென்னையில் 12கிலோ கஞ்சா கடத்திய இருவரை கோயம்பேடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்பேடு அருகே கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் இருவருடன் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. கஞ்சா கடத்தி வந்தவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராமு, பிரசாத் ஆவர். இவர்கள் இருவரிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து கோயம்பேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல, மதுரை விளாங்குடி மந்தையம்மன் கோவில் தெருவில் சிலர் கஞ்சா பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் அந்தப்பகுதிக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 12 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சிக்கந்தர் சாவடி குபேந்திரன், அய்யங்கோட்டை பாலமுருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல கும்பகோணம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். கும்பகோணத்தை அடுத்த வலையப்பேட்டையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்தின் பேரில் நின்றுகொண்டிருந்த இருவரை சோதனை செய்த பொது அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : locations ,Tamil Nadu , Cannabis,seizure,arrest,police,Chennai
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு