×

முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் குறைந்ததால் வறண்டு வரும் கம்பம் பள்ளத்தாக்கு தடுப்பணைகள்

சின்னமனூர்: அணையின் நீர் மட்டம் குறைவால் முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் வரத்து பெருமளவில் குறைந்தது. இதனால் கம்பம் பள்ளத்தாக்குகளில் உள்ள தடுப்பு அணைகளில் நீர் ஆதாராம் சேதாரமாகி மார்க்கயைன்கோட்டை, சீலையம்பட்டி தடுப்பணைகளும் வறண்டு வருகின்றன. தேனி மாவட்டம் உள்பட ஐந்து தென் மாவட்டங்களின் குடிநீரின் வாழ்வாதாரமாகவும் மற்றும் வயல் வெளிகளின் பாசனநீர் ஆதாரமாகவும் கொண்டது தேக்கடியிலுள்ள முல்லைப்பெரியாறு அணையாகும். வருடத்தில் ஜூன் மாதத்தில் முல்லை அணையில் குடிநீருடன் பாசன நீரும் திறக்கப்படுகின்ற நேரத்தில் கம்பம் பள்ளத்தாக்கு உள்பட 15 ஆயிரம் ஏக்கர் வயல் வெளிகளுக்கும், குளங்கள் கண்மாய்கள் நிரப்பப்படுவதால் நிலத்தடி நீர் உயர்வதன் விளைவாக இதர விவசாயத்திற்கும் பலன் கொடுத்து உறுதியளிக்கும் விசயமாகும்.

மேலும் தேனி மாவட்டம் உள்பட ஐந்து தென் மாவட்டங்களுக்கு குடிநீர் கிடைக்கும் தாயாகவும் விளங்கி வருகிறது. தற்போது முல்லை அணையில் கோடை வெயிலும் கொளுத்துவதால் தண்ணீரும் குறைந்துள்ளது. இதனால் நீர்மட்டம் 114 அடியாக இருக்கிறது. தொடர்ந்த கம்பம் பள்ளத்தாக்கில் நடப்பாண்டு இரண்டாம் போகத்தில் ஓரளவிற்கு நோய்களின் பிடியில் நெற்கதிர்கள் சிக்காமல் நல்ல பிடியுடன் தெளிச்சியாக கதிர்களும் அதிகளவில் பிடித்து வளர்ந்துள்ளது. இதனால் நெல் அறுவடையை தொட்டுள்ளது. தொடர்ந்த பாசன நீரும் நிறுத்தப்பட்டு விட்டதால் முல்லைப்பெரியாற்றில் தண்ணீரும் மிகவும் குறைந்து விட்டதால் லோயரில் துவங்கி பி.சி. பட்டிவரையிலுள்ள வரிசையாக ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள பல்வேறு நீண்ட அகன்ற தடுப்பணைகள் யாவும் வறண்ட நிலையில் உள்ளன.

இன்னும் 10 நாட்களில் அறுவடை துவங்கி விடும் நிலை இருப்பதால் ஒரு சில இடங்களில் மட்டும் வயல்வெளிகளுக்குள் நெற்கதிர்கள் பச்சையம் மட்டும் இருப்பதால் அதற்கு மட்டும் ஒரு தண்ணீர் தேவை என்ற நிலை உள்ளது. அதனால் குளங்களில் தேக்கப்பட்டிருக்கும் தண்ணீரை எடுத்து விவசாயிகள் பயன்படுத்தி கொள்வார்கள். முல்லைப்பெரியாற்று அணையில் தண்ணீர் குறைத்து விட்டதால் முல்லைபெரியாற்றிற்குள் இருக்கும் அணைத்து தடுப்பணைகளும் வறண்டு வருகிறது. நடப்பாண்டில் இரண்டாம் போகத்தில் எவ்வித பிரச்சனையும் இன்றி முதல் போகத்தினை காட்டிலும் அதிகளவில் உற்பத்தியும் கண்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cumbum ,Mullaperiyar , Mullaipperiyaru, Water, Dams
× RELATED முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 105 கனஅடி நீர்த்திறப்பு