×

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு : விவசாய நிலங்களில் மேயும் கால்நடைகள்

உளுந்தூர்பேட்டை: தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவு உள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு கோடை வெயிலின் தாக்கத்தால் போதிய புல் மற்றும் வைக்கோல் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் அதிக அளவு மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வரும் விவசாயிகள் வீடுகளில் இருந்து தங்களது கால்நடைகளை கிராமப்புறத்தில் உள்ள விவசாய நிலங்களில் நேரடியாக மேய்ச்சலுக்கு விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அப்போது கால்நடைகளுக்கு போதிய நெல் மற்றும் வைக்கோல் கிடைக்குமா என்பதில் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். பலர் கால்நடை சந்தைகளில் ஆடுகள் மற்றும் மாடுகளை அதிக அளவு விற்பனை செய்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கால்நடை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுத்து மானிய விலையில் வெளி மாநிலங்களில் இருந்து வைக்கோல் இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : farms ,lands , summer, agriculture, cattle
× RELATED தும்மனட்டி பண்ணையில் ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி