×

இந்தியாவில் மேலும் 6 அணு உலைகள் அமைக்கப்படும் : இந்தியா -அமெரிக்கா கூட்டறிக்கையில் அறிவிப்பு

வாஷிங்டன் : இந்தியா -அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் மேலும் 6 அணு உலைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலேவும் அமெரிக்க ஆயுத பாதுகாப்புத் துறை செயலாளர் ஆண்ட்ரியா தாம்சன் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகள் சார்பில் கூட்டறிக்கையை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி இந்தியாவில் அமெரிக்கா சார்பில் 6 புதிய அணு உலைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணுசக்தி விநியோக குழு நாடுகள் பட்டியலில் இந்தியா இணைய முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. அத்துடன் 12 நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள அணுசக்தி விநியோக குழு நாடுகள் கூட்டமைப்பும் அனுமதி அளித்துள்ளது.

2008ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் பூஷுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. ந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் விரைவில் அணு உலைகள் அமைய உள்ளன. இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்த இடது சாரிகள், அப்போது கூட்டணியை முறித்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : reactors ,India ,US ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...