×

அவிநாசி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் அவதி

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சியில்  18 வார்டுகள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், தொழிற்சாலைகள், மற்றும்  வணிக வளாகங்கள்  உள்ளன.இவற்றுக்கு பேரூராட்சி  நிர்வாகத்தின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 20 நாட்களாக அவிநாசியில் குடிநீர் விநியோகம் வழங்கவில்லை. இதனால், பொது மக்களும் பெண்களும் குடிநீருக்காக பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து அவிநாசி பேரூராட்சி பகுதி மக்கள் கூறுகையில்: பேரூராட்சியின் மூலமாக வாரம் ஒரு முறை அல்து 10 நாட்களுக்கு ஒரு முறை  விநியோகிக்கப்பட்டு வந்த  நிலையில், மேட்டுப்பாளையம் இரண்டாவது திட்ட குடிநீர் தற்போது 25 நாட்களுக்கு ஒரு முறை கூட கிடைப்பதில்லை.

தண்ணீருக்காக அலைந்து திரிய வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது கடுமையான கோடைகாலமாக இருப்பதால் வழக்கத்தைவிட தண்ணீர் அதிகமாக தேவைப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறை  குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை நேரில் சொல்லியும் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்களின் மிக அத்தியாவசியமான குடிநீர் பிரச்னையை பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக சரி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக பொதுமக்கள் கூறினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,Avinashi , Avinashi, drinking water, public
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...