×

பெரம்பலூர் கோயில்களில் பயோமெட்ரிக் முறையில் பணியாளர்களுக்கு வருகை பதிவேடு : அறநிலையத்துறை ஏற்பாடு

பெரம்பலூர்: பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோயில், பிரம்மபுரீஸ்வரர் கோயில்களில் குருக்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவேடு செய்ய இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை சார்பாக, முக்கிய சிலைகள் வைக்கப்பட்டுள்ள கோயில்களில் குருக்கள்மற்றும் திருப்பணியாளர்களுக்கு பயோமெட் ரிக் வருகைப்பதிவேடு முறையினை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் சு.ஆடுதுறை குற்றம்பொருத்தவர் கோயில் தவிர செயல்அலு வலர்கள் மேற்பார்வையில் இயங்கிவரும் சிறுவாச்சூர், செட்டிக்குளம், பெரம்பலூர் கோயில்களில் இந்த பயோமெட்ரிக் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக திருச்சி மண்டல இணைஆணையர் சுதர்சனம், அரியலூர் துணை ஆணையர் தக்கார் முருகையா ஆகியோரது உத்தரவின்பேரில், பெரம்பலூர் மரகதவல்லித் தாயார் சமேத மதனகோபால சுவாமி கோயில்,அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயில்களில் செயல்அலுவலர் மணி, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் செயல்அலுவலர் பாரதி ராஜா, செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி கோயிலில் செயல் அலுவலர் யுவராஜ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். பெரம்பலூரில் உள்ள அருள்மிகு மரகதவல்லித் தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோயில், அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயில்களில் பணிபுரியும் குருக்கள் மற்றும் திருப்பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவேடு கடந்த சிலதினங்களாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான சோதனைஓட்டத்தை கோயில் செயல்அலுவலர் மணி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் பட்டாச்சாரியார்கள், சிவாச்சாரியார்கள் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதுகுறித்து செயல்அலுவலர் மணி தெரிவிக்கையில், கோயில் திருப்பணியாளர்கள் தங்களது வருகையைப் பதிவுசெய்ய பயோமெட்ரிக் முறையில் தலா ரூ5,950 மதிப்பில் பெருமாள்கோயில், சிவன்கோயில்களில் வைக்கப்பட்டுள்ளது. இதில் செயல்அலுவலர், குருக்கள், எழுத்தர், திருப்பணியாளர்கள், பணிப்பெண்கள் ஆகியோர் கை கட் டைவிரல் ரேகையை வைத்து வருகையைப் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

டிக்கெட் கவுண்டர்

இதுகுறித்து சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலர் பாரதிராஜா தெரிவிக்கையில், சிறுவாச்சூர் கோயிலில் ஏற்கனவே சிசி டிவி கேமராக்கள், மெட்டல் டிடெக்டர்கள் பொறுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் கவுண்டரில் முதல்முறையாக பயோமெட்ரிக் வருகைப்பதிவு சிலதினங்களுக்கு முன்பே வைத்து விட்டோம். கோயில் திறப்பு திங்கள், வெள்ளி மற்றும் பவுர்ணமி, அமாவாசை நாட்கள் என மாறிமாறி வருவதால் அலுவலர்களுக்கென தனியாக அலுவலகத்தில் பயோமெட்ரிக் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத்தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : temples ,Perambalur , Preambalur, biometric,Endowment
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு