×

பிளேக் பால் ஸ்குவாஷ் ஓபன் கால் இறுதியில் ஜோஷ்னா

கெய்ரோ: பிளேக் பால் ஓபன் மகளிர் ஸ்குவாஷ் தொடரின் கால் இறுதியில் விளையாட, இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா தகுதி பெற்றார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் சுற்றில் நட்சத்திர வீராங்கனை நிகோல் டேவிட்டை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த ஜோஷ்னா, 2வது சுற்றில் இங்கிலாந்தின் சாரா ஜேன் பெர்ரியுடன் மோதினார்.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் அவர் 11-4, 6-11, 14-12, 11-9 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். 2012 சென்னை ஓபனில் சாரா ஜேன் பெர்ரியை வீழ்த்தியிருந்த ஜோஷ்னா, 7 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கால் இறுதியில் அவர் நியூசிலாந்தின் ஜோயல் கிங்குடன் மோதுகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Joshna , Blake Paul Squash open, Joshna
× RELATED ஆசிய ஸ்குவாஷ் அரை இறுதியில் ஜோஷ்னா