×

தொடர் சரிவுக்கு பிறகு தங்கம் சவரனுக்கு 216 அதிகரிப்பு: விரைவில் 25,000ஐ தாண்டும்

சென்னை: ஆபரண தங்கம் விலை நேற்று சவரனுக்கு 216 அதிகரித்தது. இந்த விலை உயர்வு மேலும் தொடரும் எனவும், விரைவில் சவரன் 25,000 ஐ தாண்டும் எனவும் நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இந்த மாதம் துவக்கத்தில் சவரனுக்கு 368 குறைந்தது. பின்னர் சவரனுக்கு 88, 144, 240 என அடுத்தடுத்த சரிவுகளை சந்தித்தது. கடந்த 13 நாட்களில் 3 நாட்கள் மட்டுமே விலை சிறிது உயர்ந்துள்ளது. மற்ற நாட்கள் எல்லாம் விலை சரிவையே சந்தித்துள்ளது. இந்த நிலையில் நேற்று சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 216  அதிகரித்து 24,696 ஆக இருந்தது. இது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:  சர்வதேச சந்தையில் உற்பத்தி குறைந்து விட்டதால், தங்கம் வரத்து குறைந்து விட்டது. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இது உள்ளூர் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இதுதவிர, திருமண சீசன் காரணமாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அடுத்ததாக அட்சய திருதியை வர உள்ளது. எனவே வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயரவே வாய்ப்புகள் உள்ளன. சவரன் 25,000ஐ தாண்டலாம் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Series collapse, gold
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...