×

‘டப்பு’ கொடுக்கிற தொகுதி ஆர்.கே.நகர்: மாவட்ட தேர்தல் அலுவலர் ஆணையத்துக்கு அறிக்கை

சென்னை: ஆர்.கே. நகரில் உள்ள வடசென்னை அதிக பணம் செலவு செய்யப்படும் தொகுதியாக (எக்ஸ்பெண்டிசர் சென்சிடிவ்) கண்டறியப்பட்டுள்ளது என்று சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் தேர்தல் ஆணையத்திற்கு  அறிக்கை அளித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் 48 பறக்கும் படைகள், 18 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 48  வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களை சேர்ந்தவர்கள் சென்னை முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை ஒன்றை எழுதியுள்ளார். அதில்,  ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி உள்ள வட சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிகம் பணம் செலவழிக்கப்படும்  தொகுதியாக (எக்ஸ்பெண்டிசர் சென்சிடிவ்) கண்டறிப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டால் வட சென்னை தொகுதியில் கூடுதல் பார்வையாளர்கள், பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tupu' block RK Nagar: Report ,District Election Officer Commission , 'Tupu' block ,RK Nagar
× RELATED மெரினா கடற்கரையில் இரவில் நேர...