×

ஒரே ஆண்டில் கொரோனா தடுப்பூசியை நாட்டிற்கு வழங்கியவர் பிரதமர் மோடி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

மதுரை: ‘‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்’’ என்று பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி பேசி உள்ளார். மதுரையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- மக்களுக்கு நன்மை செய்கிற அரசு மத்தியில் தலைமை ஏற்றுள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் ஆட்சி நடக்கிறது. ஓராண்டுக்கு முன்பு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி இருந்தது. ஒரே ஆண்டில் கொரோனோ வைரஸ் ஊசி கண்டுபிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஒரே ஆண்டில் தடுப்பூசியை நாட்டிற்கு வழங்கிய பெருமை பிரதமர் மோடியைத்தான் சாரும். ெகாரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.மத்திய அரசு நிதி தருகிறது, திட்டங்களுக்கு அனுமதி தரப்படுகிறது. இதனால் தமிழகத்தில் நாம் கொடுக்கும் வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது. ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி சாலை மேம்பாட்டிற்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. 2019, ஜனவரியில் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தினோம். இதில் 304 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சட்டம்-ஒழுங்கு பேணி பாதுகாக்கப்படுகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. தொழிற்சாலைகளுக்கு ஏராளமான சலுகை தரப்படுகிறது. வேலைவாய்ப்பு பெருகி தமிழகம் வளமிக்க மாநிலமாக திகழ்கிறது.இவ்வாறு அவர் பேசினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘முன்னோடியான  திட்டத்தால் இந்தியாவை உலகளவில் வளர்ச்சி பாதையில் எடுத்து சென்றவர்  மோடி. மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையும், தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளையும்  கொண்டு வர பாடுபட்டு வருபவர் மோடி’’ என்றார்….

The post ஒரே ஆண்டில் கொரோனா தடுப்பூசியை நாட்டிற்கு வழங்கியவர் பிரதமர் மோடி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Edabadi Pannisamy ,Madurai ,Edapadi Pannisamy ,central government ,Edabadi Palanisamy ,Dinakaraan ,
× RELATED நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும்...