×

கச்சத்தீவு திருவிழா எதிரொலி : ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க 4 நாட்களுக்கு தடை

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழாவை, மார்ச் 16-ம் தேதி நடத்துவதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணம் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதில் கலந்துக்கொள்ள வரும் பக்தர்களுக்கான குடிநீர், தற்காலிக கூடாரங்கள், மின்சார வசதிகள் உள்ளிட்ட வசதிகளை இலங்கை கடற்படை மேற்கொண்டு வருகின்றது. இந்த திருவிழாவிற்காக இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் 16-ம் தேதி வரை 4 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் படகுகள் சோதனை மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு நடக்க உள்ளதால் மீனவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது .ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மற்றும் பொது மக்கள் கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்கு வருடந்தோறும் சென்று வருகின்றனர்.

இந்தாண்டு மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் திருவிழாவுக்கு, ராமேஸ்வரம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் படகுகளில் செல்ல உள்ளனர். இதையடுத்து கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் படகுகளின் ஆவணங்கள் சரிபார்ப்பு நடக்க உள்ளது. இதனையடுத்து இன்று முதல் 16ம் தேதி வரை 4 நாட்களுக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,Katchatheevu ,fishermen ,Echo ,Rameswaram , Katchatheevu, Anthony Festival, Rameswaram fishermen
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...