×

மழை எங்கும் பதிவாகவில்லை; ஆனால் வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி  நேரத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உள் தமிழகத்தில் அதிகபட்சமாக 2ல் இருந்து 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் 39 டிகிரி செல்சியஸும்,  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 38.3 டிகிரி செல்சியஸும், வேலூர் மாவட்டத்தில் 37.1 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை இல்லை என்றாலும், வறண்ட வானிலை  காணப்படும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : everywhere ,Chennai Meteorological Center , Rain, Dry Weather, Chennai, Weather Research Center
× RELATED பலத்த காற்றுடன் திடீர் மழை