×

நடைப்பாதையில் ஆளுங்கட்சியினர் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்க கூடாதா? : உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை : நடைப்பாதையில் ஆளுங்கட்சியினர் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்க கூடாதா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் நீதிமன்ற உத்தரவை மீறி பேனர் வைக்கப்படுகிறது என்றால் காஞ்சிபுரம் தமிழகத்தில் இருக்கிறதா? அல்லது பல்லவ சாம்ராஜ்ஜியத்தில் தொடர்கிறதா? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், பேனர் வைக்க விவிஐபி போன்ற மிக முக்கிய பிரமுகர்களுக்கு என தனி சட்டம் வைத்து அரசு அதிகாரிகள் செயல்படுகிறீர்களா? என்றும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மெத்தனமாக செயல்பட்ட வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க கூடாது?  என்றும் சென்னையில் விதிமீறல் பேனர்கள் இல்லை என அரசால் உறுதியாக தெரிவிக்க முடியுமா? என்றும் வினவியுள்ளது. மேலும் விதி மீறல் பேனர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை அளிக்க தலைமை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : governors ,sidewalk ,High Court , Walkway, governor, high court, question, chief secretary
× RELATED கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர்...