×

தேர்தல் எதிரொலி: அபிநந்தனுடன் அரசியல்வாதிகள் எடுத்த புகைப்படங்களை நீக்க முகநூல் நிறுவனத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: இந்திய விமான வீரர் அபிநந்தனுடன் அரசியல்வாதிகள் எடுத்து கொண்ட புகைப்படத்தை நீக்க வேண்டும் என முகநூல் நிறுவனத்திற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்தியில் பாஜ  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 16-வது மக்களவை பதவிக் காலம் வரும் ஜூன் 3ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு  செய்தது. இதன்படி, நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு,  மே 23-ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. 17-வது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தைகள் கடந்த 10-ம் தேதி மாலை முதல் அமலுக்கு  வந்தது.

இதனால் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் தொடர்புடைய பல்வேறு கட்சிகளின் சுவரொட்டிகளும் அப்புறப்படுத்தப்பட்டு  வருகிறது. அதேபோல் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகள் அருகே அக்கட்சியின் கொடிகம்பங்களில் பறக்கும் கொடிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள்  இந்திய விமானி அபிநந்தடன் எடுத்த புகைப்படங்கள் சமுக வவைதளங்களில் வலம் வருகிறது. தேர்தல் நடத்தைகள் அமலில் உள்ளதால், இந்த புகைப்படங்கள் மூலம் அரசியல் தலைவர்கள் ஆதாயம் தேடலாம் என கருதி  முகலூலில் உள்ள அபிநந்தன் அரசியல் தலைவர்கள் புகைப்படங்களை அகற்ற அந்நிறுவனத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,politicians ,Indian Election Commission ,Abhinandan , Elections, Abhinandan, Politicians, Photos, Facebook, Election Commission of India
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...