×

அழகிகள், திருநங்கைகள் பிடியில் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம்

* பயணிகள் அச்சம்

ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் விபச்சார அழகிகள் மற்றும் திருநங்கைகளை ஒழிக்க மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் 800க்கும் மேற்பட்ட பஸ்களும், வெளியூர், உள்ளூர் பயணிகளும் வந்து செல்லும் இடமாக உள்ளது. இங்கு சமூக விரோதிகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

பயணிகள் அசரும் நேரத்தில் அவர்களின் உடைமைகளை அபகரிக்கும் திருடர்கள், பெண் பயணிகளிடம் சில்மிஷம் செய்யும் சமூக விரோதிகள், போதை ஆசாமிகள், பிச்சை எடுக்கும் கும்பல் என பலரும் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் எய்ட்ஸ் பரப்பும் விபச்சார அழகிகள் மற்றும் திருநங்கைகள் நடமாட்டமும் அதிகரித்து வருவது வேதனைக்குரியது.
இங்கு திரியும் விபச்சார அழகிகள் வெளியூரைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். வேலைக்குச் செல்வது போல் வீடுகளிலிருந்து கிளம்பி ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் வந்து விடுகின்றனர். பஸ்நிலையத்தில் நிற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமின்றி வயதானவர்களையும் விட்டுவிடுவதில்லை.

அந்த வகையில் பஸ்நிலையத்தில் சுற்றித்திரியும் விபச்சார அழகிகளில் பெரும்பாலானவர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனக்கூறப்படுகிறது. மேலும் ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் முகாம் சுளிக்க வைக்கும் வகையிலும், அறுவறுக்கத்தக்க வார்த்தைகளாலும், செயலினாலும் பணம் கேட்டு மிரட்டி வசூல் செய்கின்றனர்.

பணம் தராவிட்டால் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்கின்றனர். மேலும் ஒட்டன்சத்திரம் நகர் பகுதியான காந்தி மார்க்கெட், முக்கிய வீதிகளான தாராபுரம் ரோடு, திண்டுக்கல் சாலை, பழனி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள வியாபார ஸ்தலங்கள், வனிக நிறுவனங்கள், கடைகளையும் திருநங்கைகள் ஆக்கிரமித்துக்கொண்டு அடாவடியாக செய்து வருகின்றனர். மேலும் பஸ் பயணிகளைப் பின் தொடர்ந்து சென்று விபச்சார வலையில் சிக்க வைக்க தனியாக புரோக்கர்களும் நடமாடுகிறார்கள்.

இளைஞர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலின் நடமாட்டமும் இருக்கிறது. பணம், நகைகளை பறிகொடுப்பவர்கள், நடந்த சம்பவத்தை வெளியே சொல்வதற்கு வெட்கப்பட்டு போலீசில் புகார் செய்யாமல் சென்று விடுகிறார்கள். விபச்சார அழகிகள் யார் என்பது தெரிந்திருந்தும் கைது செய்ய போலீசார் தயக்கம் காட்டி வருவதாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் புகார் தெரிவித்தனர்.

எனவே பொதுமக்களின் நலன் கருதியும் ஒட்டன்சத்திரம் காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்து, விபச்சாரமில்லா ஒட்டன்சத்திரத்தை உருவாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bus stand ,Ottnancur , Ottanchathiram ,bus stand,transgender ,passengers afraid
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை