×

காங்கிரஸ் தலைவர்களை புகழ்ந்த ஹபீஸ் சயீது: காங்கிரசுக்கு பதிலடி கொடுத்து பாஜக வீடியோ வெளியீடு

டெல்லி: காங்கிரஸ் தலைவர்களை புகழ்ந்த ஹபீஸ் சயீது புதிய வீடியோவை பா.ஜனதா வெளியிட்டு காங்கிரசுக்கு பதிலடி கொடுத்துள்ளது. மசூத் அசாரை ஒப்படைக்க சென்ற அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த்  சிங்குடன் அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த அஜித் தோவல் விமானத்தில் செல்லவில்லை என்றும் மசூத் அசார் உள்ளிட்ட 3 தீவிரவாதிகளை ஒப்படைக்க, அப்போதைய சிபிஐ இயக்குனர் ஏபி சிங் தலைமையில் நான்கு  உயர் அதிகாரிகள் சில கமாண்டோ படை வீரர்கள் மட்டும் இருந்தனர் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, மசூத் அசாரை கைது செய்தது காங்கிரஸ் அரசு என்றும் 1999-ம் ஆண்டு கந்தகார் விமான கடத்தல் சம்பவத்தில் 155  பிணைக்கைதிகளை மீட்க மசூத் அசாரை விடுதலை செய்தது அப்போதைய பாஜக அரசு தான் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார். மேலும் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் அசாரை மரியாதையுடன் மசூத் -ஜி என  ராகுல்காந்தி குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பா.ஜனதா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ஹபீஸ் சயீதின் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘‘காங்கிரஸ் தலைவர்கள் சிலர் அறிவுடன் பேசுகிறார்கள். எல்லாவற்றுக்கும்  பாகிஸ்தானை குறை கூறுவதை நிறுத்துங்கள் என்று பா.ஜனதாவிடம் காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். முதலில் உங்களை பாருங்கள். காஷ்மீரில் பா.ஜனதா என்ன செய்திருக்கிறது என்று பாருங்கள்’’ என்று ஹபீஸ் சயீது  பேசியுள்ளார். ஹபீஸ் சயீதுடனான காங்கிரசின் உறவு குறித்து காங்கிரஸ் தலைவர்கள்தான் பதில் கூற வேண்டும் என்றும் பா.ஜனதா தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hafiz Saeed ,leaders ,Congress ,BJP , Congress leaders, Hafiz Saeed, Congress, BJP, video release
× RELATED ஆந்திராவில் ரோஜாவுக்கு எதிர்ப்பு...