×

மகன் போட்டியிடும் தொகுதியை தேர்வு செய்தார் சந்திரபாபு நாயுடு

திருமலை: விசாகப்பட்டினம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் போட்டியிடுகிறார். ஆந்திராவில் சட்டப்பேரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் ஒரே நாளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்வு இன்னும் நிறைவு பெறாத நிலையில் தெலுங்கு தேசம் கட்சியில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி நிலவி வருகிறது. இதில் 120 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்ற நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷை எங்கே நிறுத்துவது என்று ஆலோசிக்கப்பட்டது. ராயலசீமாவில் சந்திரபாபு நாயுடு குப்பம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் கடலோர ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தின் மையமாக அமராவதி தலைநகராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதால் வட ஆந்திரா பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியை பலப்படுத்தும் விதமாக விசாகப்பட்டினம் வடக்கு சட்டப்பேரவை தொகுதியில் லோகேசை போட்டியிட வைப்பது என முடிவு செய்து இதற்கான அறிவிப்பை சந்திரபாபு நாயுடு உறுதி செய்துள்ளார். மேலும் பல அமைச்சர்களை இந்த முறை தேர்தலில் எம்பியாக போட்டியிட வேண்டுமென சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்ட நிலையில் அதற்கு அமைச்சர்கள்  எம்எல்ஏவாக போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதனால் வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி நீடித்து வருகிறது. இருப்பினும் இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் தேர்வு இறுதி  செய்யப்பட்டு 175 சட்டப்பேரவைத் தொகுதி, 25 மக்களவை தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chandrababu Naidu ,contestant , Son, Choosing Success, Chandrababu Naidu
× RELATED சொல்லிட்டாங்க…