×

எலக்‌ஷன் சர்கார்: தீவிர பிரசாரத்தில் களமிறங்கும் தேர்தல் கமிஷன்

தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய தேர்தல் வாக்குபதிவு தொடர்பான குறும்படங்கள் அனைத்து சினிமா தியேட்டர்களிலும் திரையிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டள்ளது.  அடுத்த வாரம் முதல் நாடு முழுவதும் அனைத்து சினிமா தியேட்டர்களிலும் இந்த குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதற்காக ஏழுவிதமான குறும்படங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவை தமிழ், மலையாளம் உள்ளிட்ட 22 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தியேட்டர்களில் சினிமா தொடங்குவதற்கு சற்று முன்பாக இவை திரையிடப்படும். அதனை போன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற தகவலும் சினிமா இடைவேளையில் தியேட்டர்களில் ஒளிபரப்பப்படும். டி.வி சானல்களிலும், சமூக வலைதளங்களிலும் தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்களை வெளியிடவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : field , Election Commission
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது