கேடிகளுக்குத்தான் மோடி டாடி

திருப்பூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிர்வாகி இல்லத் திருமண விழாவில், அக்கட்சியின் நிறுவன தலைவரும், எம்எல்ஏவுமான கருணாஸ் நேற்று கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இன்னும் நிறைய கட்சிகள் கூட்டணியை முழுமை செய்யவில்லை எனவே நிதானமாக முடிவெடுப்போம். பத்திரிகையாளர் சந்திப்பின்போது பிரேமலதா கோபத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டாம். இதுவரை எந்த பெரிய கட்சியும் எங்களை கூட்டணிக்கு அழைக்கவில்லை. பாமக, விடுதலை சிறுதைகள் போன்று அரசியல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பது என் கனவு. 27 சதவீதத்தை விட குறைவாக உள்ள சமுதாய கட்சிகளுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கும்போது எங்களுக்கு வாய்ப்பளிக்காதது வேதனை அளிக்கிறது.

சசிகலா இருந்திருந்தால் என்னையும், அன்சாரியையும் கூட்டணிக்கு அழைத்து பேசி வாய்ப்பளித்திருக்கலாம். அவர் ஜெயிலில் இருப்பதால் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 21 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள இடைதேர்தல் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதனால்தான் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி ராமதாஸ் என பிரச்சாரம் மேற்கொண்டு பாமக வட ஆற்காடு பகுதியில் பெற்ற ஓட்டுக்கள் அடிப்படையிலும், தேமுதிக 2006 ல் பெற்ற வாக்குகள் அடிப்படையிலும் கூட்டணியில் சேர்த்துள்ளனர். 21 இடங்களில் வெற்றி பெறவே இந்த தேர்தல் வியூகம், கூட்டணிகள் அமைகிறது. எனவே, 100 அல்ல ஒரு ஓட்டு வைத்திருப்பவர்கள் வந்தாலும் கூட்டணியில் சேர்த்து கொள்வார்கள்.  மக்கள் நீதி மய்யம் கமல் இருண்ட தமிழகத்திற்கு வெளிச்சம் தர வேண்டும் என்ற புதிய பார்வையில் புதிய சிந்தனையுடன் புதிய யுக்தியுடன் வந்துள்ளார். அதற்கு சிம்பாலிக்காக டார்ச்லைட் சின்னம் கிடைத்துள்ளது.

கருணாநிதி, ஜெயலலிதா உயிருடன் இல்லாத நிலையில் நடக்கவுள்ள தேர்தல் இது. மத்திய அரசு தமிழகத்திற்கு இத்தனை ஆண்டு என்ன செய்தது. கடந்த 5 ஆண்டுகள் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மோடி எங்களுக்கு டாடி என்றால், யாருக்கு டாடி கேடிகளுக்கு வேண்டுமானால் டாடியாக இருக்கலாம். ஒட்டு மொத்தமாக மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துள்ளது. கஜா புயலுக்கு வருத்தம் தெரிவித்துகூட பிரதமர் அறிக்கை கூட விடவில்லை. 7 பேர் ஏன் விடுதலை செய்யப்படவில்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. மத்திய அரசு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதிலும் அரசியல் நடத்துவது. பணபலம் உள்ளவர்கள், அதிகாரம் உள்ளவர்கள் சர்வாதிகாரியாகலாம் என்றால் இதில் ஜனநாயகம் எங்கே இருக்கிறது. இது நிச்சயம் இத்தேர்தலில் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>