×

சென்னை விமான நிலையத்தில் சூடான் பயணி திடீர் மரணம்

சென்னை: சூடான் நாட்டை சேர்ந்தவர் அவாடு தாகா யூசுப் (51). தொழிலதிபர். இவருக்கு வயிறு சம்மந்தப்பட்ட நோய் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 15 நாட்களுக்கு முன் சூடானில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்.  சிகிச்சை நிறைவடைந்ததும் சொந்த நாட்டுக்கு செல்ல முடிவு செய்தார். அதன்படி சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று வந்தார். காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து ஜெட்டா வழியாக சூடான் செல்லும் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்வதற்காக பாதுகாப்பு சோதனை, சுங்கச்சோதனை, குடியுரிமை சோதனை உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு பயணிகளுடன் சேர்ந்து விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்தார்.

அப்போது யூசுப், திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் மருத்துவக் குழுவிற்கு அவசரமாக தகவல் கொடுத்தனர். இதையடுத்து மருத்துவக் குழுவினர் விரைந்து வந்து சூடான் நாட்டுப் பயணி யூசுப்பை பரிசோதித்தபோது, அவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, யூசுப்பின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். யூசுப் உயிரிழந்த விவகாரம் சூடான் நாட்டு தூதரகத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,airport ,Sudan ,Chennai , Chennai airport, Sudan, traveller death
× RELATED கடும் குளிரால் முதியவர் சாவு