×

2வது குற்றப்பத்திரிகையில் தகவல் நீரவ் மோடி ரூ.934 கோடியை சொந்த கணக்கிற்கு மாற்றினார்

மும்பை: வங்கியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் சென்ற பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, வங்கியில் வாங்கிய கடனில் ரூ.934 கோடியை தனது சொந்த வங்கிக் கணக்கிற்கும் மனைவி, தந்தை பெயரில் உள்ள வங்கிக் கணக்கிற்கும் மாற்றியுள்ளார் என  மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த 2வது குற்றப்பத்திரிகையில்  கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட தொகையில் ரூ.560 கோடி (8 கோடி டாலர்) தனது வங்கிக் கணக்கிற்கும், ரூ.200 கோடி (3 கோடி டாலர்) மனைவி அமியின் வங்கிக் கணக்கிற்கும், ரூ.174 கோடி (2.5 ேகாடி டாலர்) தனது தந்தை தீபக் மோடியின் வங்கிக் கணக்கிற்கும் மாற்றியுள்ளார். இவை அனைத்தும் வெளிநாட்டில் உள்ள வங்கி கணக்குகள். பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ.6,500 கோடி மோசடி செய்த நீரவ் மோடி, இந்த மோசடி தொகையில் 91 சதவீதத்தை எங்கு பதுக்கியுள்ளார் என அமலாக்கத்துறை கண்டு பிடித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi , Nirav Modi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...