×

பிஎன்பி பாரிபா ஓபன் 4வது சுற்றில் ஒசாகா: குணேஸ்வரன் ஏமாற்றம்

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) தகுதி பெற்றார். அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 3வது சுற்றில், உள்ளூர் வீராங்கனை டேனியல்லி கோலின்சுடன் மோதிய ஒசாகா 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 22 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 3வது சுற்றில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் பெல்ஜியம் வீராங்கனை யாசலைன் போனவெஞ்ச்சரை வீழ்த்தினார்.  

முன்னணி வீராங்கனைகள் பெலிண்டா பென்சிக் (சுவிஸ்), அனெட் கோன்டாவெய்ட் (எஸ்டோனியா), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), மோனா பார்தெல், ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 3-6, 6-7 (3-7) என்ற நேர் செட்களில் இவோ கார்லோவிச்சிடம் (குரோஷியா) போராடி தோற்றார். முன்னணி வீரர்கள் கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), டொமினிக் தீம் (ஆஸ்திரியா), மிலோஸ் ரயோனிச் (கனடா), யோஷிஹிடோ நிஷியோகா (ஜப்பான்) ஆகியோரும் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Osaka ,PNB Paribu Open ,Gunasewaran ,round , Osaka, PNB Paribu Open, Gunasewaran,
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ்: ஒசாகாவை வீழ்த்தினார் கரோலின்