×

நாடாளுமன்ற தேர்தல்: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் கவுதம் காம்பிர் பாஜக சார்பில் போட்டி என தகவல்

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பிர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு இந்திய அணியில் (ஒருநாள்  போட்டி) அறிமுகமான கம்பீர் இதுவரை 58 டெஸ்ட் போட்டியில் 4154 ரன் (அதிகம் 206, சராசரி 41.95, சதம் 9, அரை சதம் 22), 147 ஒருநாள் போட்டியில் 5238 ரன் (அதிகம் 150*, சராசரி 39.68, சதம் 11, அரை சதம் 34) மற்றும் 37  டி20ல் 932 ரன் (அதிகம் 75, சராசரி 27.41, அரை சதம் 7) விளாசி உள்ளார். ரஞ்சி கோப்பை உட்பட உள்ளூர் போட்டிகளில் டெல்லி அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ்  அணிகளுக்காகவும் விளையாடி உள்ளார்.

2007ம் ஆண்டு டி20 உலக கோப்பை பைனலிலும் (57ரன்),2011ம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பைனலிலும் (97ரன்) இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி உள்ளார். 2012 மற்றும் 2014  ஐபிஎல் சீசனில் இவரது தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதி அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்த ஓய்வு பெறுவதாக கவுதம் காம்பிர்  அறிவித்தார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு ஆதரவாக அமிர்தசரஸில் வாக்குகள் சேகரித்த கவுதம் காம்பிர், டெல்லியில் இயங்கிவரும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக வேட்பாளராக கவுதம் காம்பிர் போட்டியிடலாம் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gautam Gambhir ,India ,BJP , Parliamentary election, former Indian player Gautam Gamper, BJP
× RELATED எம்.எஸ்.தோனி இந்தியாவுக்கு கிடைத்த...