×

பழமை மாறாமல் நடந்த திருமணம் : குதிரையில் வந்த மணமகனை தூக்கி மணமகளிடம் ஒப்படைத்த தாய்மாமன்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே மணமகனை, தாய்மாமன் தூக்கி சென்று மணமகளிடம்ஒப்படைக்கும் நூதன சடங்குடன் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ளது எழுவனம்பட்டி. இங்கு ராஜகம்பளத்து நாயக்கர் சமூக மக்கள் உள்ளனர். இவர்கள் இன்றுவரை பழமை மாறாமல் திருமணம் நடத்தி வருகின்றனர். இச்சமூகத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்  பவித்ரா ஜோடியின் திருமண விழா எழுவனம்பட்டியில் நடைபெற்றது. திருமணத்தையொட்டி ஊரின் நடுவே உள்ள மந்தைவெளியில் மூலிகை மரமான பாலமர குச்சிகளையும் இலைகளையும் கொண்டு வந்து மணப்பெண்ணுக்கு குடிசை அமைத்தனர். பின்னர் வீட்டிலிருந்து மாப்பிள்ளை வேட்டி, துண்டு அணிந்து குதிரையில் மந்தைக்கு புறப்பட்டார்.

அவருக்கு முன்பாக ஆண்கள் தேவராட்டம் ஆடியவாறு வந்தனர். மாப்பிள்ளை மந்தையை அடைந்ததும் மணப்பெண்ணின் தாய்மாமன் அவரை தூக்கிச் சென்று மணமகள் அருகே அமர்த்தினார். அதன்பிறகு மாப்பிள்ளை வீட்டில் விருந்து நடந்தது. இதுகுறித்து எழுவனம்பட்டியை சேர்ந்த ஜெயபாலன் கூறுகையில், ‘‘புதுமைகள் புகுந்து வரும் உலகில் பழமை மாறாமல் ஏறத்தாழ 100 ஆண்டுகளாக திருமணம் நடந்து வருகிறது. மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் எங்களது மரபுப்படி திருமணம் நடத்தி வருகிறோம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mother mother ,groom ,bride , Marriage, horse,mama
× RELATED செய்யாறு அருகே இன்று நடக்கும் திருமண...