×

பாலக்கோடு அருகே தூள்செட்டி ஏரியில் மண் திருட்டு

பாலக்கோடு: பாலக்கோடு அருகே தூள் செட்டி ஏரியில், சட்ட விரோதமாக மண் அள்ளி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை அருகே கும்மனூர் ஊராட்சிக்குட்பட்ட தூள்செட்டி ஏரி, சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு நீர் வரும் பாதைகள் அனைத்தும் தடைபட்டு விட்டதால், கடந்த 50 ஆண்டுகளாக இந்த ஏரி வறண்டு காணப்படுகிறது. இதனால், சில மர்ம நபர்கள், இரவு நேரங்களில் ஏரியின் நடுவே சுமார் 10 முதல் 15 அடி வரை குழி தோண்டி மண் அள்ளி கடத்தி வருகின்றனர்.

இதனால் கூலினூர், எக்காண்டஅள்ளி, ராசிகுட்டை, படகாண்டஅள்ளி, ஜனப்பனூர், சாமனூர் போன்ற கிராமங்களில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது. இதனால் அப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ராயக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் சிலர், ஏரியின் மையப்பகுதியில் இரவு நேரங்களில் குழி தோண்டி மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர்.

இதை தட்டிக்கேட்கும் விவசாயிகளை, கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தாக்க முற்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இது குறித்து பலமுறை தாசில்தார் மற்றும் போலீசாரிடம் புகார் கூறியும், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மணல் கடத்தல் கும்பலை பிடிக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், போராட்டம் நடத்தவோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : powder lake ,Balakode , Palakkodu, tulcetti lake, soil
× RELATED முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்