×

அபுதாபி பட்டத்து இளவரசர் முகம்மது பின் ஜாயத் உடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: அபுதாபி பட்டத்து இளவரசர் முகம்மது பின் ஜாயத் அல் நாயான், தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடியுள்ளார். கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப்பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்றார். அபுதாபி சென்ற பிரதமர் மோடியை, அபுதாபியின் பட்டத்து இளவரசர், மொகமத் பின் ஜாயத் அல் நாயான் வரவேற்றார். அப்போது இரு தரப்பு உறவுகள் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். இரு தரப்பு அதிகாரப்பூர்வமான பேச்சு நடந்தது. ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிலையில், இன்று மொகமத் பின் ஜாயத் அல் நாயான், தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடியுடன் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த உரையாடலின் போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய ஓத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்க அழைப்பு விடுத்ததற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இருதரப்பு உறவுகள் மேலும் வலுவடைந்து வருவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். அதுமட்டுமல்லாது, இந்தியா- பாக். விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதேபோல் துருக்கி அதிபர் எர்டோகனிடனும் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். துருக்கி அதிபருடனான பேச்சுவார்த்தையின்போது, பயங்கரவாதத்தால் உலக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Mohammed bin Jayat ,Abu Dhabi , PM Narendra Modi,Crown Prince,Abu Dhabi,phone,strategic partnership
× RELATED தமிழகத்தை `புரெவி’ புயல் தாக்கும் அபாயம் முதல்வருடன் பிரதமர் மோடி பேச்சு