×

பென்னாத்தூர் அடுத்த கேசவபுரத்தில் எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் : 10 பேர் காயம்

அணைக்கட்டு: பென்னாத்தூர் அடுத்த கேசவபுரம் (கொட்டாமேடு)  கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 36ம் ஆண்டு காளைவிடும் திருவிழா நடந்தது. மண்டல துணை தாசில்தார் சண்முகம், விழா குழுவினர், பொதுமக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுகொண்ட பின் விழா தொடங்கியது. இதில் வேலூர், பென்னாத்தூர், அணைக்கட்டு, ஒடுகத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 200 மாடுகள் பங்கேற்றன. பென்னாத்தூர் கால்நடை மருத்துவர் சண்முகம் பரிசோதனைக்கு பின் காளைகள் போட்டியில் கலந்து கொண்டன.

இதில், சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் விழாவை உற்சாகத்துடன் கண்டு களித்தனர். குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்து சென்ற காளைக்கு அதன் உரிமையாளரிடம் முதல் பரிசாக 66,666, 2ம் பரிசாக 55,555, உள்பட மொத்தம் 60 பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், மாடுமுட்டி காயமடைந்த பார்வையாளர்கள் 10 பேருக்கு முகாமில் உள்ள மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : kesavapuram , Pennattur, calves, festival
× RELATED செங்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி பலி