×

தனுஷ் கோடி கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த 30 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ் கோடி பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தனுஷ்கோடி வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக எஸ்பி தனிப்பிரிவு மற்றும் கியூ பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனுஷ் கோடி பழைய துறைமுகம் பகுதியில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த 2 சாக்கு மூட்டைகளை கைப்பற்றி சோதனை செய்ததில் சுமார் 30 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பிச் சென்றால் கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், கஞ்சாவை அங்கு புதைத்து வைத்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு மாத காலம் மட்டும் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhanush Cocker ,beach , Dhanush Cody, Ganja, confiscated, Sri Lanka, drugs
× RELATED தூத்துக்குடி கடற்கரையில் இருந்து...