டி20ல் இங்கிலாந்து ஒயிட்வாஷ் வெற்றி

செயின்ட் கிட்ஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த 3வது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.வார்னர் பார்க் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 13 ஓவரிலேயே வெறும் 71 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேம்ப்பெல், கேப்டன் ஹோல்டர், நிகோலஸ் பூரன் தலா 11 ரன்,  மெக்காய் 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். இங்கிலாந்து பந்துவீச்சில் டேவிட் வில்லி 3 ஓவரில் 7 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். மார்க் வுட் 3, ரஷித் 2, டென்லி  1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 10.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன் எடுத்து வென்றது. ஹேல்ஸ் 20, பேர்ஸ்டோ 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் 4, கேப்டன் மோர்கன் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல்  இருந்தனர். இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது. வில்லி ஆட்ட நாயகன் விருதும், ஜார்டன் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி