×

பிசிசிஐ கோரிக்கையை ஏற்றே ராணுவ தொப்பி அணிய அனுமதி அளித்தோம்: ஐசிசி விளக்கம்

துபாய்: தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலேயே, ராணுவ தொப்பி அணிந்து விளையாட இந்திய அணி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது.ஆஸ்திரேலிய அணியுடன் ராஞ்சியில் கடந்த 8ம் தேதி நடந்த ஒருநாள் போட்டியின்போது, புல்வாமா தாக்குதலில் பலியான படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து  விளையாடினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ-க்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஐசிசி-க்கு கடிதம் அனுப்பியது.

இந்த நிலையில், ஐசிசி பொது மேலாளர் கிளேர் பர்லாங் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘தீவிரவாத தாக்குதலில் பலியான படை வீரர்கள் குடும்பத்தினருக்கு நிதி திரட்டும் முயற்சியின் ஒரு அங்கமாக, இந்திய அணி வீரர்கள்  ராணுவ தொப்பி அணிந்து விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என பிசிசிஐ தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதை ஏற்று, முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BCCI ,Army ,ICC , BCCI, acceptable,,rmy cap Permission,ICC ,description
× RELATED அணியின் நலனுக்காக புதிய...