×

சில் லி பாயின் ட்...

*  சையது முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரின் சூப்பர் லீக் ஏ பிரிவு ஆட்டத்தில், குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ரயில்வேஸ் அணியை வீழ்த்தியது. டாசில் வென்று பேட் செய்த ரயில்வேஸ் 20 ஓவரில் 9 விக்கெட்  இழப்புக்கு 110 ரன் எடுத்தது (ஹர்ஷ் தியாகி 32*, அமித் பாணிக்கர் 23). அடுத்து களமிறங்கிய குஜராத் 14.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்து வென்றது (பார்திவ் 25, தன்வார் 55*, அக்சர் பட்டேல் 20*).  
* ஜார்க்கண்ட் அணியுடன் நடந்த ஏ பிரிவு ஆட்டத்தில் மகராஷ்டிரா 14 ரன் வித்தியாசத்தில் வென்றது. மகாராஷ்டிரா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன் (விஜய் ஹரி ஸோல் 50, அங்கித் பாவ்னே 64*). ஜார்க்கண்ட் 20  ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன் (விகாஷ் சிங் 46*, விராத் சிங் 24).
* விதர்பா அணியுடன் நடந்த பி பிரிவு ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. விதர்பா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன் (ரத்தோட், உமேஷ் யாதவ் தலா 26, கேப்டன் கணேஷ் சதீஷ் 24,  ஜிதேஷ் ஷர்மா 20); மும்பை 15.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன் (ஜெய் பிஸ்டா 73, கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 28, சூரியகுமார் யாதவ் 25).

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : The Silence ,the Sea ...
× RELATED சில்லிபாயின்ட்..