×

திண்டுக்கல்லில் வெடிகுண்டுகள் வீசி பயங்கரம் பட்டப்பகலில் பிரபல ரவுடி, மனைவி வெட்டிக்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் பாறைப்பட்டியை சேர்ந்தவர் திருப்பூர் பாண்டி(46). பிரபல ரவுடி.  இவரது மனைவி பஞ்சு (எ) பஞ்சவர்ணம்(40).  மகன்கள் சந்திரசேகர், அசோக்குமார். இவர்கள் கடந்த 2018, ஆகஸ்ட்டில் ஆர்.வி.நகரை சேர்ந்த குமரேசன் என்பவரது கொலையில் சம்பந்தப்பட்டிருந்தனர். எனவே குமரேசன் ஆதரவாளர்கள் திருப்பூர் பாண்டியின் மகன்களை கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்தனர். இதையறிந்த திருப்பூர் பாண்டி, மனைவியுடன் நல்லாம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். மகன்களை கோவைக்கு அனுப்பி விட்டார். நேற்று காலை 8.30 மணியளவில் நல்லாம்பட்டியில் திருப்பூர் பாண்டி தங்கியிருந்த வீட்டுக்கு ஹெல்மெட் அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் வந்தது.  அதிர்ச்சியடைந்த திருப்பூர் பாண்டி, வீட்டை பூட்டிவிட்டு உள்ளே பதுங்கிக் கொண்டார். ஆனால் அந்த கும்பல் வீட்டின் கதவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். மேலும் நாட்டு வெடிகுண்டுகளை கதவின் மீது வீசினர்.

இதனால் பதறிப்போன திருப்பூர் பாண்டியின் மனைவி பஞ்சவர்ணம் வெளியே வந்து, ‘மகன்கள் வீட்டில் இல்லை. அவர்களை விட்டுவிடுங்கள்’ என்று கெஞ்சினார். ஆனால் அந்த கும்பல் பஞ்சவர்ணத்தை சரமாரியாக வெட்டி சாய்த்தது. மனைவியின் அலறல் கேட்டு வெளியே வந்த திருப்பூர் பாண்டியையும் சுற்றி வளைத்து கும்பல் வெட்டி சாய்த்தது. பின்னர் அரிவாளை காட்டி பொதுமக்களை மிரட்டியவாறு தெருவில் நடந்து சென்று பைக்கில் ஏறி தப்பினர். தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vettikkalai ,Rowdy , bomb, Rowdy, wife
× RELATED சேலம்: ரவுடி வீட்டில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல்