×

ராமேஸ்வரம் மீனவர் நாளை முதல் ஸ்டிரைக்

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 19 பேர் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் உள்ளனர். குடும்ப சூழ்நிலையால் விடுமுறை நாளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்று சிறைபிடிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் 2 பேரும் விடுவிக்கப்படவில்லை. 19 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி நாளை (மார்ச் 13) முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதையொட்டி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரையில்,  மீனவ பிரதிநிதிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை உடன் விடுவிக்கவும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு சேதமடைந்த நிலையில் உள்ள 130 படகுகளுக்கு 20 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் நகராட்சி பஸ் நிலையம் முன் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும், தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rameswaram ,fisherman ,strike , Rameswaram fisherman, strike
× RELATED சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று...