×

இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நோயாளிக்கு ரூ.74.5 லட்சம் இழப்பீடு ஜான்சன் நிறுவனத்துக்கு உத்தரவு

புதுடெல்லி: இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சையால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ரூ.74.5 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ஒரு நோயாளிக்கு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், சிகிச்சைக்கு பிறகு அவருக்கு உடல் நிலையில் பல்வேறு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. மருத்துவ ரீதியாக தீர்வு கிடைக்காததால், வழக்கு தொடர்ந்தார். ஜான்சன் நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிரா அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை உத்தரவு பிறப்பித்தது. விசாரணையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஏஎஸ்ஆர் செயற்கை மூட்டு பல்வேறு நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிய வந்துள்ளது. அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தொடர் தோல்விகளை அடுத்து, ஜான்சன் நிறுவனம் தான் தயாரித்த 93,000 ஏஎஸ்ஆர் செயற்கை மூட்டுகளை 2010ம் ஆண்டு திரும்பப்பெற்றது.

 இந்த நிலையில், மும்பையை சேர்ந்த நோயாளி தொடர்ந்த வழக்கில், மகாராஷ்டிர அரசின் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரைப்படி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் நோயாளிக்கு ரூ.74,57,180 இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த இழப்பீட்டை 30 நாட்களுக்குள் வழங்கி, அதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவர்களுக்கு ஏற்பட்ட உடல் பாதிப்பு, வயது உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ரூ.30 லட்சம் முதல் ரூ.1.2 கோடி வரை இழப்பீடு வழங்கலாம் என்ற அரசு நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த குழுவின் பரிந்துரைப்படி வழங்கப்பட்ட முதல் இழப்பீடு உத்தரவு இதுவாகும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Johnson ,hip replacement surgery ,patient , Hip replacement surgery, Johnson and Johnson,
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...