×

3 தொகுதி தேர்தல் தள்ளிவைத்தது ஜனநாயகத்துக்கு எதிரானது: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: தமிழத்தில் 3 சட்டமன்ற ெதாகுதிக்கான தேர்தல் தள்ளி வைத்திருப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தல் பணிகள் குறித்து திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று கலைஞர் அரங்கில் நடந்தது. திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி. துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி., மற்றும் தலைமை நிலைய செயலாளர்கள், அணிகளின் செயலாளர்கள் கலந்து கொண்டார்கள். காலை 10.30 மணி முதல் பகல் 12 மணி வரை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: 17வது மக்களவைக்கான பொதுத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலும், காலியாகவுள்ள 18 சட்டமன்ற தொகுதிகளின் இடைத் தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதை இந்தக் கூட்டம் வரவேற்கிறது.

3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை மட்டும் தள்ளி வைத்திருப்பது மிகுந்த உள்நோ க்கம் நிறைந்த ஜனநாயகத்திற்குப் புறம்பான நடவடிக்கை என்று இந்தக் கூட்டம் வேதனையுடன் பதிவு செய்கிறது. அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வேறு தேர்தல் வழக்குகளில் தேர்தலை நடத்தக் கூடாது என்று எவ்வித தடையுத்தரவும் தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தல் வழக்கிலும் தடையுத்தரவு ஏதும் இல்லை. இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது அப்பட்டமான வாக்கா ளர் விரோத நடவடிக்கை. அரவக்குறிச்சியும், ஒட்டப்பிடாரமும் ஏறக்குறைய 18 மாதங் களுக்கு மேலும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி 8 மாதங்களுக்கு மேலாகவும் காலியாக உள்ளது. ஆகவே அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் 17வது மக்களவைத் தேர்தலுடனேயே சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை கூட்டம் கேட்டுக் கொள்கிறது. தேர்தல் நடத்த முன் வராவிட்டால், நீதிமன்றம் மூலம் இந்த 3 தொகுதிகளின் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது. மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : blocking ,election ,district secretaries ,DMK , election, democracy, DMK district secretaries meeting
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்