×

பங்குனி உத்திர திருவிழா சபரிமலை கோயில் நடை திறப்பு: இன்று கொடியேற்றம்

திருவனந்தபுரம்: பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டு தாேறும் பங்குனி உத்தர திருவிழா விமரிசையாக நடக்கும். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை ஒட்டி நேற்று மாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி வாசுதவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார்.

நேற்று வேறு பூஜைகள் எதுவும் நடக்கவில்லை. நேற்று கோயில் நடை திறந்த பின்னர் கோயிலில் தங்கக் கதவு பொருத்தும் பணிகள் நடந்தது. இன்று காலை 7.30 மணியளவில் திருவிழா கொடியேற்று நிகழ்ச்சி நடக்கிறது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கொடியேற்றுகிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maram Uthiraru ,festival ,ceremony ,Sabarimala temple , Uthiram Festival, Sabarimala Temple
× RELATED வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் பூச்சொரிதல்