×

தார் சாலைக்குள் புதைந்த லாரி: உடையாம்பாளையத்தில் பரபரப்பு

கோவை: தரமில்லாமல் அமைக்கப்பட்ட தார் சாலையால் உடையாம்பாளையம் பகுதியில் வாகனங்கள் சாலைக்குள் புதைவது தொடர்கதையாகி வருகிறது. கோவை சவுரிபாளையம் பகுதியை அடுத்த உடையாம்பாளையம் பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தரமின்றி அமைக்கப்பட்டதாகவும், சாலை அமைத்த சில நாட்களிலேயே குழிகள் ஏற்பட்டதாகவும் அப்பகுதி பொது மக்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், உடையாம்பாளையம் ஜி.ஆர் மருத்துவமனை அருகே மணல் லோடு ஏற்றி வந்த லாரியின் சக்கரம் தரமின்றி அமைக்கப்பட்ட தார் சாலைக்குள் சுமார் ஒரு அடி ஆழம் வரை புதைந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இந்த பகுதியில் வாகனங்கள் சாலையில் புதைவது வழக்கமாகி வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதே போல் லாரி ஒன்றி சக்கரம் தார் சாலைக்குள் புதைந்தது. அதனை பொக்லைன் உதவியுடன் வெளியே எடுத்தனர். தற்போது மீண்டும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஆட்சியாளர்கள் அமைக்கும் தரமற்ற தார் சாலைகளால் இது போன்ற சம்பவங்கள் தொடர்கிறது’. என்று குற்றம்சாட்டினர். தொடர்ந்து, தார் சாலைக்குள் புதைந்த லாரியை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Larry ,Thar Road , Dhar Road, Larry, Udaiyambalayam
× RELATED ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த மருத்துவ மாணவன் தற்கொலை