×

நாடாளுமன்ற தேர்தல் தேதி எதிரொலி : திருப்பதி கோவிலில் எம்பி., எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமைகள் அனைத்தும் ரத்து

திருப்பதி: தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எம்பி., எம்.எல்.ஏக்களின் சிபாரிசு கடிதங்களுக்கு தரிசனம், அறைகள் வழங்கமுடியாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவர்களது சிபாரிசு கடிதங்ளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 16-வது மக்களவை பதவிக் காலம் வரும் ஜூன் 3ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதன்படி, நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. 17-வது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தேர்தல் நடத்தைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. எனவே, மக்கள் பிரதிநிதிகளான எம்பி., எம்.எல்.ஏக்கள் வழங்கக்கூடிய முன்னுரிமைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கோவில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தெரிவித்துள்ளார். சுவாமி தரிசனம் செய்ய வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஏழுமலையான் கோவிலுக்கு முன்பு அரசியல் சார்ந்து பேசக்கூடாது என்றும் சீனிவாசராஜு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Echo ,election ,MPs ,Tirupati temple , MPs, MLAs, priorities, cancellation
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள்...