×

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் மூலம் இதுவரை 2.6 கோடி விவசாயிகளுக்கு ரூ.2000 உதவித்தொகை வழங்கல்

டெல்லி : விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கும் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் மூலம் தமிழகத்தில் இதுவரை 14 லட்சத்து 1000 விவசாயிகளும் தேசிய அளவில் சுமார் 2 கோடியே 60 லட்சம் விவசாயிகளும் ரூ.2000 உதவித் தொகையை பெற்றுள்ளனர். இந்த புள்ளி விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதற்காக இதுவரை ரூ.5000 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்


5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த தொகை 3 தவணையாக தலா ₹2,000 வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்’ என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. 5 ஏக்கர் வரை உள்ள விவசாயிகள் நாடு முழுவதும் 50 லட்சம் பேர் இருப்பது கணக்கெடுப்பின் அடிப்படையில் தெரிய வந்தது. முதல் தவணையாக ₹2 ஆயிரம் நிதி வழங்கும் இத்திட்டத்தை கடந்த மாதம் பிப்ரவரி 24ம் தேதி பிரதமர் மோடி உ.பி. மாநிலத்தில் முறைப்படி தொடக்கி வைத்தார்.  இதை தொடர்ந்து, நாடு முழுவதும் விவசாயிகளின் வங்கி கணக்கில் முதல் தவணை தொகை ₹2000 செலுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 2.6 கோடி விவசாயிகளுக்கு உதவித்தொகை


இந்நிலையில் 37 நாளுக்குள் தேசிய அளவில் சுமார் 2 கோடியே 60 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2000 உதவித் தொகை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் முதல் தவணை தொகை ரூ.2000 வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் இத்திட்டத்தின் கீழ் வரும் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 14 லட்சத்து ஆயிரம் தமிழக விவசாயிகள் இதுவரை 2000 ரூபாய் உதவித் தொகையை பெற்றுள்ளனர். இந்த திட்டத்திற்காக இதுவரை ரூ.5215 கோடி செலவிடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kisan Samman Financial Assistance Scheme ,Rs , Farmer, subsidy, prime minister's kisan summan finance, prime minister, office
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...