×

ரிஷப் பண்ட் வளர்ந்து வரும் வீரர்; அவரை தோனியுடன் ஒப்பிடாதீர்கள்; ஷிகர் தவான்

மொகாலி: பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். எம்.எஸ்.டோனி, அம்பாதி ராயுடு, முகமது ஷமி,  ஜடேஜாவுக்கு பதிலாக கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட், புவனேஷ்வர், சாஹல் இடம் பெற்றனர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன் குவித்தது. இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 359 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. கடைசி கட்டத்தில் ஆஷ்டன் டர்னர் அதிரடியில் இறங்க, ஆட்டம் விறுவிறுப்பானது.

டர்னர் - அலெக்ஸ் கேரி ஜோடி 6வது விக்கெட்டுக்கு 86 ரன் சேர்க்க, ஆட்டம் ஆஸி. கட்டுப்பாட்டுக்குள் வந்தது. டர்னர் 33 பந்தில் அரை சதம்  அடித்தார். கேரி 21 ரன் (15 பந்து, 2 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 359 ரன் எடுத்து அபாரமாக வென்றது. தோல்வி குறித்து தவான் அளித்த பேட்டியில் நாங்கள் பனிப்பொழிவு குறித்து 2-வது முறையாக தவறாக முடிவு எடுத்ததாக தெரிவித்த அவர், கடந்தப் போட்டியில் இந்திய அணி பனிப்பொழிவு வரும் என எதிர்பார்த்து இரண்டாவது பேட்டிங் செய்தோம்.

ஆனால் அங்கு பனிப்பொழிவு ஏற்படவில்லை. அதேபோல நேற்று நடைபெற்ற போட்டியில் பனிப்பொழிவு ஏற்படாது என நினைத்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தோம். போட்டியில் தோற்றதற்கு இது ஒரு முக்கியமான காரணம் என்று தெரிவித்தார். ரிஷ்ப் பண்ட் நேற்றைய ஆட்டத்தில் ஸ்டெம்பிங்கை தவறவிட்டது சற்று வருத்தம் தான். ஆனாலும் அவர் தற்போது வளர்ந்து வரும் இளம் வீரர். அதனால் அவரை தோனியுடன் ஒப்பிடுவது தவறு எனக் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : player ,Rishap Bund ,Shikhar Dhawan ,Dhoni , Cricket, Indian team, Virat Kohli, Shikhar Dhawan, Rishab Pant, MS Dhoni, Stumping
× RELATED ஊரடங்கால் கிரிக்கெட் போட்டி இல்லை; கல்...