×

செஞ்சி அருகே வயலில் மேய்ந்த 14 மாடுகள் திடீரென சுருண்டு விழுந்து சாவு : 30க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை

செஞ்சி: செஞ்சி அருகே வயலில் மேய்ந்த 14 மாடுகள் பரிதாபமாக இறந்தன. மேலும் உடல்நலம் குன்றிய 30க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கீழ்வயலாமூர் கிராமத்தை சேர்ந்தவர் இருதயநாதன். இவருக்கு அப்பகுதியில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெல் பயிரிட்டு சமீபத்தில் அறுவடை செய்தார். இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட இவரது நிலத்தின் அருகில் உள்ள பகுதியை சேர்ந்தவர்கள் சுமார் 40க்கும் மேற்பட்ட மாடுகளை மேய்த்துள்ளனர்.

அங்கு மாடுகள் மேய்ந்த நிலையில், சிறிது நேரத்தில் நல்லாளம் கிராமத்தை சேர்ந்த சவுரி முத்துவின் 7 மாடுகள், கீழ்வயலாமூரை சேர்ந்த ஆரோக்கியசாமியின்
4 மாடுகள், சின்னப்பன் என்பவரது 3 மாடுகள் என மொத்தம் 14 மாடுகள் திடீரென சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தன. மேலும் சோர்வடைந்து சுருண்டு விழுந்த 30க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து பெரியதச்சூர் போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், வயலில் எலிகளிடமிருந்து நெற்பயிரை பாதுகாக்க பியூரிடான் என்ற எலிக்கொல்லி மருந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் வீரியம் குறையாத நிலையில் அங்கு மேய்ந்த மாடுகள் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gorge ,field , Gingee,vayal, cows
× RELATED மாரநேரி கிராமத்தில் உழவர் வயல் தினவிழா