×

பெரம்பலூர் துறையூர் சாலையில் கோடை வெயிலுக்கேற்ற கயிற்று கட்டில் விற்பனை கனஜோர்

பெரம்பலூர்: பெரம்பலூரில் கோடை வெயிலுக்கு ஏற்ற கயிற்றுக் கட்டில் விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. இதில் சிங்கிள் காட், டபுள் காட் போல சகல வசதியுள்ளதால் மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. குழந்தைகளுக்கு பிரத்தியேக கட்டிலும் விற்பனைக்கு வந்துள்ளன. கோடை வெப்பம் கண்ணா பின்னா வென்று தனது தாக்கத்தை அதிகரித்து அதகளம் செய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு சராசரி மழை அளவைக் காட்டிலும் மிகக்குறைந்த மழை பெய்து, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து, காடுகள், வயல்கள் கருகிக் கிடக்கிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் வீட்டு சுவர்களில் எதிரொலிக்கிறது. அதில் வெப்பத்தை வெளியேற்றும் கட்டில் மெத்தைகளில் படுத்தால் சூடுபிடித்து தினமும் அவதிப்படும் சூழலே ஏற்படுகிறது. இதற்குத் தீர்வாக பெரம்பலூரில் கயிற்றுக் கட்டில் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது.

பெரம்பலூர் துறையூர் சாலையில் கயிற்றுக் கட்டிலுக்கான இரும்பு பிரேம்கள் மலைபோல் குவித்து வைத்து விற்கப்படுகின்றன. மூங்கில்கள் சாகுபடியே மறைந்து இதர கைப்பிடிகள் நீடித்து உழைக்காததால் இரும்பு கைப்பிடிகள், இரும்புக் கால்களுடன் வண்ணம் தீட்டிய பிரேம்கள் விற்பனைக்காகக் குவித்து வைக்கப்பட்டுள்ளன. துறையூரைச் சேர்ந்த ரவி என்பவர் தனது குடும்பத்து டன் கல்யாண் நகர் பகுதியில் தங்கிக் கொண்டு கயிற்றுக் கட்டில் விற்பனை யில் ஈடுபட்டுள்ளார். இங்கு ஐந்தரை அடி, ஆறடி நீளம், இரண்டரை அடி, மூன்றடி  நீளமுள்ள கட்டில்கள் விற்கப்படுகின்றன.  இதுதவிர ரவி தனது டூவீலரில் கட்டில் தனியாக, கயிறு தனியாக மாட்டிக்கொண்டு எடுத்துச் சென்று ஊர் ஊராக விற்பனை செய்து வருகிறார்.

கொளுத்தும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள கயிற்றுக் கட்டில் விற்பனை சூடுபிடித்துள்ளது. குறிப்பாக கட்டில்கள் ரூ.1300க்கும், ரூ.1400க்கும், ரூ.2ஆயிரத்திற்கும், மடக்கு பிரேம் கட்டில் ரூ.2,400க்கும் விற்கப்படுகிறது. துணிநாடா ரூ.30க்கும், கயிறு ரூ.450க்கும் விற்கப் படுகிறது. உடையாத இரும்பில் உருவாக்கப்பட்ட பிரேம் மட்டுமே ரூ.1,500க்கு விற்கப்படுகிறது. இதில் சிறுவர் சிறுமியருக்கென மூன்றடி நீளமுள்ள கட்டிலும் விற்கப்படுகிறது. இது சூடூ தாங்காமல் குழந்தைகளை தாக்கும் சிக்கன் பாப்ஸ், பொன்னுக்கு வீங்கி, அக்கி, படர்தாமரை போன்ற உடல் பிரச்னைகள் வராமல் தடுக்க, குழந்தைகளின் உடலை குளிர்ச்சியுடன் வைத்தி ருக்க உதவுமென்றும் நகர்ப்புறங்களில் மட்டுமன்றி கிராமப்புறங்களிலும் நம்பப்படுவதால் பேபி கட்டிலுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ganjore ,road ,Perambalur Duraiyur , Preambalur,summer, cot
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...