×

விராலிமலை அருகே ஜல்லிக்கட்டு : 673 காளைகளை அடக்க 190 வீரர்கள் திரண்டனர்

விராலிமலை: விராலிமலை அருகே உள்ள கல்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 673 காளைகள் பங்கேற்றன. 190மாடு பிடி வீரர்கள் மாடுகளை பிடித்தனர். இதில் 7 பேருக்கு காயம் ஏற்பட்டது. விராலிமலை அருகே உள்ள கல்குடியில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி கோயில் அருகே உள்ள குளத்தில் அமைக்கப்பட்ட வாடி வாசலில் முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் மருத்துவ  பரிசோதனைக்கு பின்னர் திருச்சி, மணப்பாறை, புதுக்கோட்டை மற்றும விராலிமலை; சுற்றுவட்டார பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 613 ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியே அவிழ்த்து விடப்பட்டன.  இலுப்பூர் ஆர்டிஓ (பொ) சிவகுமாரி போட்டியை துவக்கி வைத்தார்.

இலுப்பூர் டிஎஸ்பி சிகாமணி, புதுக்கோட்டை டவுன் டிஎஸ்பி ஆறுமுகம். விராலிமலை தாசில்தார் சதீஸ்சரவணகுமார் ஆகியோர் கண்காணித்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின் 2 சுற்றுகளாக 190 மாடு பிடி வீரர்கள் பிடித்தனர். இதில் மாடுக்கள் முட்டியதல் 7 பேர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு விராலிமலை அரசு மருத்துவ மனை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விழாவில் பங்கேற்றார். பிடி பாடாத மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்கம், வௌ்ளி காசு போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன.  விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : soldiers ,Viralimalai , Viralimalai, jallikattu, Bulls
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை