×

கொளுத்தும் கோடை வெயில்; மண்பானை விற்பனை ஜோர் : பைப் பொருத்திய பானைகளுக்கு மவுசு

சேலம்: கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது. இதில் பைப் பொருத்திய மண் பானைகள் மக்களின் கவனம் ஈர்த்து வருகிறது. கோடை தொடங்குவதற்கு முன்பே கடந்த 15ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அனல் காற்று வீசியது.  இதனால் இம்மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக வெள்ளிரிக்காய், இளநீர், கரும்புசாறு, மற்றும் பழச்சாறு போன்றவற்றின் விற்பனை அதிகமாக இருந்தது.

கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பல வழிகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாக மண்பானை விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த காலங்களில் மண்பானை மட்டுமே விற்பனை வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள் பிளாஸ்டிக் பைப் பொருத்திய மண்பானை விற்பனைக்கு வைத்துள்ளனர். இந்த வகை மண்பானை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பபை பெற்றுள்ளது. இது குறித்து மண்பானை விற்பனையாளர்கள் கூறுகையில், ‘‘வழக்கமாக மார்ச் இரண்டாவது வாரத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் நடப்பாண்டு முன்கூட்டியே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் அடிக்கடி குடிநீர் அருந்துகின்றனர்.

பிரிட்ஜில் வைத்த குளிர்ந்த தண்ணீரை குடித்தால் சளி, காய்ச்சல் ஏற்படும். ஆனால் மண்ணால் செய்யப்பட்ட மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து எத்தனை நாள் கழித்து குடித்தாலும் சளி ஏற்படாது. வெயிலில் இருந்து காத்துக்கொள்ள மக்கள் அதிகளவில் மண்பானை வாங்கி வருகின்றனர். இதனால் கடந்த மாதத்தை விட, நடப்பு மாதத்தில் மண்பானை விற்பனை களைக்கட்டியுள்ளது. வழக்கமாக வியாபாரத்தில் இருந்து 20 முதல் 30 சதவீதம் மண்பானை விற்பனை அதிகரித்துள்ளது. சாதாரண மண்பானை அளவு பொறுத்து 100 முதல் 150 எனவும், பைப் பொருத்திய மண்பானை 250 முதல் 350 என விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் மாதம் வரை மண்பானை விற்பனை அமோகமாக  இருக்கும்,’’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Joker , summer, soil pot, sale
× RELATED எம்.ஜி.ஆர் ரசிகர் வேடத்தில் கார்த்தி