×

தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே தனி விமான சலுகையை தவிர்த்தார் நிர்மலா சீதாராமன்

சென்னை: தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனக்கு வழங்கப்பட்டுள்ள தனி விமான சலுகையை தவிர்த்து விட்டு சாதாரண விமானத்திலேயே பயணம் செய்துள்ளார். நேற்று மாலை லோக்சபா தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளதாக தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் டில்லியில் இருந்து சென்னை புறப்பட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனக்கு வழங்கப்பட்டுள்ள அரசு கார், பாதுகாப்பு வாகனங்கள் ஆகியவற்றை தவிர்த்து பா.ஜ., தலைவருக்கான காரிலேயே விமான நிலையத்திற்கு வந்தார்.

தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சருக்கான தனி விமானத்தை தவிர்த்து, சாதாரண விமான பயணத்தை மேற்கொண்டார். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பே அவர் சென்னை புறப்பட வேண்டி இருந்ததால், இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இரவு 8.40 மணிக்கு டில்லி சென்ற போதும் தனியார் வாகனங்களையே அவர் பயன்படுத்தி உள்ளார். இதே போன்று விமான நிலையத்திற்கு தன்னை பார்க்க யாரும் வர வேண்டாம் என அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டிருந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmala Sitaraaman , Nirmala Sitaraaman,avoided,separate,airline ,election rules,force
× RELATED நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில...